நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - காந்தியடிகளின் நிர்மானத் திட்டங்களும், சைமன் கமிசனும் தேசியப் பாடல்களின் தோற்றமும்
ஒத்துழையாமை இயக்கத்தின்போது மது விலக்கும் ஒரு போராட்டமாகச் செயல்படத் தொடங்கியது பற்றியும், அன்னிய ஆடைகளை அகற்றி கதரை உடுத்தும்படி கட்டளை இட்டார் காந்தியடிகள் என்பது பற்றியும், மேலும் இந்துக்களையும், முஸ்லீம்களையும் ஒன்றாக இணைக்க இந்து – முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தினார் என்பது பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக காந்தியடிகளின் நிர்மானத் திட்டங்கள் பற்றியும், சைமன் கமிசன் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- காந்தியடிகளின் நிர்மானத் திட்டங்கள்
- கொத்தடிமையும், பஞ்சமும்
- மது விலக்கு மார்க்கம்
- சைமன் கமிசன்
காந்தியடிகளின் நிர்மானத் திட்டங்கள்:
ஒத்துழையாமை இயக்கத்தில் ஏற்பட்ட மாற்றம், சுயராஜ்யக் கட்சியின் தோற்றம், சிறைத் தண்டனை, குடல் நோய் போன்றவை காந்தியடிகளின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தின. இந்நிலையில் சிறையிலிருந்து வெளிவந்த காந்தியடிகள் சமுதாயச் சீர்கேடுகள் விடுதலைக்குத் தடையாக இருப்பதை உணர்ந்து நிர்மானத் திட்டங்களை மக்களிடையே புகுத்தி மக்களை விழிப்படைச் செய்ய முயன்றார். தமிழ்நாட்டில் நிர்மானத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஈ.வெ.ராமசாமியும், ராஜாஜியும் முன்னோடியாகத் திகழ்ந்தனர். அந்நிலையில் காந்தியத்தை விரும்பும் கவிஞர்களும் நிர்மானத் திட்டங்களை மக்களிடையே பரப்ப கவிதைகளை புனைந்தனர். நிர்மானத் திட்டங்களில் கதர் உற்பத்தி, மது விலக்கு என்ற இரண்டையும் வெளிப்படுத்துவதில் கவிஞர்கள் நாட்டம் கொண்டதையும் காணமுடிகிறது.
கொத்தடிமையும், பஞ்சமும்:
கதரின் சிறப்புக்களை விளக்குவதாக ‘கதர்ப்பாட்டுக்கள்’ என்ற நூலை நைனியப்பா வெளிப்படுத்தியுள்ளார். அன்னிய ஆடைகளை வழியனுப்பிவிட்டு கதர் உடையை அணிந்தால் கொத்தடிமையும், பஞ்சமும் நீங்கும் என்பதை உணர்த்துவதாக
முகவை கண்ண முருகனரும்(1), கதர் அணியாத மக்களைப் பதர்களாகக் கருதவேண்டும் என்பதை விளக்குவதாக விசுவநாத தாசும் பாடல்களை வெளிப்படுத்தியுள்ளனர். ‘கதருடை’ என்ற பாடல் மூலம் கதரின் பெருமையை விளக்குவதாகவும், ‘கதர் விற்பனை’ என்ற பாடல் மூலம் குறத்தி கதர் ஆடையை விற்பனை செய்வதாகவும் பீர் முகம்மதுப் பாவலர் பாடியுள்ளார். பஞ்சு விளையும் காடு பாதியிருந்தும் நாம் அன்னியரை எதிர்ப்பார்ப்பது வெட்கக்கேடு என்பதை ‘கதர் அபிவிருத்தி’ என்ற தலைப்பிலும், அன்னியராடையை ஒழித்துக்கட்ட ‘அந்நிய நாட்டாடையை ஒழித்தல்’ என்ற தலைப்பிலும் பாடல்களைப் படைத்துள்ளார் வீரணக் கோனார்.
மது விலக்கு மார்க்கம்:
ஆசாரி என்பவர் மதுவினால் வரும் கேடுகளை வெளிப்படுத்திக்காட்டி இந்திய நாட்டிலிருந்து மதுவை முழுமையாக அகற்றவேண்டும் என்ற கருத்தை ‘மதுபான விலக்கு’ என்ற பாடல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மக்களைக் கோமாளிகளாக்கிடும் மதுவை ஒழித்தால் இன்பம் பெறலாம் என்பதைத் தெரிவிப்பதாக ‘மது விலக்கு மார்க்கம்’ என்ற பாடலை வீரணக் கோனாரும், மது அருந்துவதால் வரும் கேடுகளை ‘அன்பார்ந்த நேயர்களே, அருந்தாதீர் கள்ளு, கள்ளு, கள்ளு’ என்ற பாடல் மூலம் காமாஷிப் பிள்ளையும், கள்ளினை நீக்கிப் புண்ணியத்தைத் தேடு என்பதைப் பீர் முகமதுவின் பாடல் மூலமும் தெளிவாக உணரமுடிகிறது. மதுவின் கொடுமைகளை வெளிப்படுத்திக் காட்டி, மது அருந்துதலை நீக்கினால் புண்ணியம் கிடைக்கும். நல்வாழ்வு மலரும் என்ற உணர்வை மக்களிடையே புகுத்த கவிதைகளைப் புனைந்துள்ளனர் என ஊகிக்கமுடிகிறது.
சைமன் கமிசனும் தேசியப் பாடல்களின் தோற்றமும்:
காந்தியினுடைய செல்வாக்கு மீண்டும் உச்சநிலையை அடைய சைமன் கமிசன் தூண்டுதலாக அமைந்தது. சைமன் கமிசனை லாகூரில் எதிர்த்த லாலா லஜபதிராயை சாண்டர்ஸ் என்பவன் பலமாக அடித்ததால் சில நாட்களுக்குப் பின் லாலா லஜபதிராய் இறந்தார். இந்நிலை இந்தியர்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. லாலா லஜபதிராய் மறைவுக்குக் காரணமான சாண்டர்ஸை சுகதேவ் என்பவர் சுட்டுக் கொன்றார்(2).

1929-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி தேசபக்தர்களைப் பாதிக்கும் வகையில் ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட இந்தியப் பாதுகாப்பு மசோதா விவாதிக்கப்பட்டபோது பகவத்சிங், இராஜகுரு என்ற இருவரும் சபையில் வெடிகுண்டு வீசினர்(3). இந்த இரு நிகழ்ச்சிகளும் இந்தியாவில் பயங்கரவாதம் உருவாவதை வெளிப்படுத்தியதால் பயங்கரவாதிகளுக்குக் கடுமையான தண்டனை கொடுக்க எண்ணிய ஆங்கிலேயர்கள் இம்மூவருக்கும் தூக்குத் தண்டனை விதித்தனர்(4). மூவரின் தூக்குத் தண்டனை தமிழ்க் கவிஞர்களின் உள்ளங்களில் ஆவேசக் கனவை எழுப்பிய நிலையில் அவர்கள் கவிதைகளால் வெளிப்படுத்த முன்வந்ததைக் காண முடிகிறது. மூவர் உயிர்விடுத்த நிகழ்ச்சியை அவலச் சுவை மூலம் மக்களுக்கு அறிவிப்பதாக ‘சர்தார் பகவத்சிங் உயிர்விடுத்த சுதந்திர நாதம்’ என்ற பாடலை மணி பாடியுள்ளார். படித்தவர்களும் பாமரர்களும் விடுதலை உணர்வு கொள்ளும் வகையில் மூவரின் தூக்குத் தண்டனையை 12 சிறுசிறு பாடல்களாக ஒவ்வொரு பாடலையும் ஒரு மெட்டில், ஒரு சுவையுடன் வெளிப்படுத்துவதாக ‘பகவத்சிங் தூக்குப்பாடல்’(5) என்ற பாடலாக புலவர் குழந்தை வெளிப்படுத்தியுள்ளார். காந்தியக் கொள்கைகளை ஆதரித்த தேசியக் கவிஞர்கள், பயங்கரவாதத்தையும் ஆதரித்துப் போற்றியுள்ளதை இக்கவிஞர்களின் கவிதைகள் வழி அறியமுடிகிறது. அடுத்த வலைப்பதிவில் சட்டமறுப்பு இயக்கமும் தேசியப் பாடல்களின் தோற்றமும் பற்றியும், வட்டமேஜை மாநாடுகளும் தேசியப் பாடல்களின் தோற்றமும் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. முகவை கண்ண முருகனார், சுதந்திர கீதம், ப.42.
2. மா.பொ. சிவஞானம், சுதந்திரப் போர்க்களம், ப.125.
3. மா.பொ. சிவஞானம், சுதந்திரப் போர்க்களம், ப.127.
4. Mahajan, The Nationalist Movement in India, P.221.
5. புலவர் குழந்தை, புலவர் குழந்தைப் பாடல்கள், பக்.218-228.
Sponsorship
This Content Sponsored by SBO Digital Marketing.
Mobile-Based Part-Time Job Opportunity by SBO!
Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:
Job Type: Mobile-based part-time work
Work Involves:
Content publishing
Content sharing on social media
Time Required: As little as 1 hour a day
Earnings: ₹300 or more daily
Requirements:
Active Facebook and Instagram account
Basic knowledge of using mobile and social media
For more details:
WhatsApp your Name and Qualification to 9994104160
a.Online Part Time Jobs from Home
b.Work from Home Jobs Without Investment
c.Freelance Jobs Online for Students
d.Mobile Based Online Jobs
e.Daily Payment Online Jobs
Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob
0 கருத்துகள்